
நண்பா!!
பரந்த வானத்தில்
பறக்க பிறந்தவன் நீ!
மறந்து விடாதே!
பயத்தில் படிந்து விடாதே!
இருக்கையில் இருந்தே
இறக்கைகாக ஏங்கி
இளமையை இழந்து விடாதே!
இரு கைகள் இருக்கையில், இறக்கைகள் எதற்கு!
புத்தாண்டு பிறப்பதில் புதுமை இல்லை
புதியவனாய் பிறந்திடு
புதுமைகள் புரிந்திடு
சாதனையை சிந்தனையில் வை!
சிந்தனையை செயல் படுத்து!
செயலை சாதனையாய் மாற்று!
சாத்தியமில்லாததை
செய்வது மட்டுமே
சாதனை அல்ல!
சத்தியமுடன் செய்யும்
சாதாரண செயலும்
சாதனையே!
விழிதிரு!
பகல் மட்டும் போதாது
இரவையும் இரவல் வாங்கு!
உன் விழி திறக்க
பிறக்கும் பல வழிகள்
நல் வழியில் நீ நடந்தாலும்
உனை தடுக்கி விட துடிக்கும் பல உள்ளங்கள்!
நீ தடுக்கியே விழுந்தாலும்
பரந்த வானத்தில்
பறக்க பிறந்தவன் நீ!
மறந்து விடாதே!
பயத்தில் படிந்து விடாதே!
1 comment:
Good work!
-S.E. Fatima Rani
Post a Comment