Saturday, February 14, 2009

Gift of Magi

ஆங்கில எழுத்தாளர் ஓ. ஹென்றியின் படைப்பு, ஞானிகளின் பரிசு (The Gift of the Magi). அந்த அற்புத படைப்பின் என் கலவை தமிழாக்க முயற்சி.

புருசன் பொஞ்சாதி
ரெண்டு பேரு
புரூக்கிளின் நியூயார்க்
அவுங்க ஊரு

போட்ற துணியிலேர்ந்து
எல்லாமே பழசு
ப்ரோக்கன் பர்னிச்சர் தாங்க
ஒரே சொகுசு

பெருமையா சொல்றதுக்கு
இருந்தது ஆளுக்கொரு சொத்து - அதையும்
பொறாமையா பாக்கறதே
தினசரி ஊர்ல நடக்கற கூத்து

அந்த பொண்டாட்டியோட பொக்கிஷம்
நீளமான கேசம்
வாரத்துக்கு ஒரு முறைதான் குளிச்சாலும்
வாசனை வீசும்

ஐயா அலட்டுர ஐட்டம்
பந்தாவான பாக்கெட் வாட்ச்சு
டவர்ல காமிக்கற டைமும்
இதுவும் எக்சாட் மேட்சு

அரைபட்டினி தினசரி
வந்தது வெடிங் அணிவர்சரி
லக்ஸ்சுரி ஐட்டம் தோசை
கிஃப்ட்டு கொடுக்க மட்டும் ஆசை

அன்பான கணவனோட
அழகான வாட்ச்சிக்கு
மேட்ச்சான சேய்ன்னு வாங்க
வித்தாங்க தலைமுடியை காசுக்கு

மனசெல்லாம் மனைவியோட
மணமான கேசத்தின் நெனப்பு
தயங்காம வித்தாரு வாட்ச்சை
வித்த காசுக்கு கிடைச்சது தங்க சீப்பு

தன் சொத்தை இழந்து, தன்
துணையோட சொத்தை
சிறப்பாக்க நெனச்ச, இவங்க
அன்பு தாங்க நிலையான சொத்து!!!

அன்பு தாங்க நிலையான சொத்து!!!
NRI Bailout




















பெத்தவங்க சொத்த
சுத்தமா செலவழிச்சி
சொத்த காலேஜில
சுமாரா படிச்சி

இத்துபோன கம்பேனியோட
இன்டர்வியுல பாஸ் ஆகி
எம்பஸி வாசல்ல
எம பசியோட நின்னு

வீசி எறிஞ்ச
விசாவை வாங்கிட்டு
அடுத்த நாளே கிளம்பி
அமெரிக்கா வந்து

பேஸ்மண்ட்ல படுத்து
பெஞ்சில கிடந்து
தெரியாத வேலைய
தெரிஞ்சதா சொல்லி

கிடச்ச வேலைய
கலக்கலா பண்ணி
கடைசியா
காரைவாங்கி

கல்யாணம் பண்ணி
கராஜ் வச்ச வீடு வாங்கி
செட்டில் ஆவர
சமயத்தில...

வால் ஸ்ரிட் கிரைசிஸ்ல
வேலை போயி
சரிஞ்ச ஸ்டாக் மார்கெட்ல
சேவிங்க்ஸ் போயி

போஃர்கிளோசர்ல வீடும்போயி
பிளைட்டு காசுக்கு காரைவித்து
லான் மோவர்லேயே
லகாடியா ஏர்போர்டு வந்து

சீப்பான ஏர்லைன்ஸ் ஏரி
சிங்கார சென்னை வந்து
ஷேர் ஆட்டோல
சைடுல உக்காந்து

எல்லாமே இழந்துவந்த
என்ஆர்ஐ க்கு
பெய்ல் அயுட்
பொறந்த நாடு!!!