Saturday, April 03, 2010










காயம் பட்டதால் சிவந்ததோ
ஆகாயம், இல்லை இல்லை
சாயங்கால சூரியனின்
சாயம் பட்டதால்
சிவந்ததே செவ்வானம்!

Friday, March 12, 2010

தாலாட்டு
------------
ஆராரோ கண்ணே தாலேலோ
நான் உன் அம்மை அல்லவா
உனக்கொரு உண்மை சொல்லவா!
ஆராரோ கண்ணே தாலேலோ

அழகாய் அழும் அமுதம் நீ
சிரித்தால் மலரும் குமுதம் நீ
காதல் வடித்த கவிதை நீ - எங்கள்
காதல் வடித்த கவிதை நீ
நாங்கள் விழித்திருந்து கண்ட கனா நீ

ஆராரோ கண்ணே தாலேலோ

பிஞ்சு விரல்கள் நெஞ்சை
பஞ்சாய் வருடுதம்மா
பட்டு கால்கள் பட்டு - உன்
பட்டு கால்கள் பட்டு
பட்ட கவலைகள் பறந்ததம்மா

ஆராரோ கண்ணே தாலேலோ

உணவு ஊட்டையிலே - பாரு
நிலவு வானத்திலே
உணர்வு பெறுகுதம்மா - பாச
உணர்வு பெறுகுதம்மா
இந்த நினைவு மரவாதம்மா

ஆராரோ கண்ணே தாலேலோ
நான் உன் தந்தை அல்லவா
நீ என் தங்கம் அல்லவா
ஆராரோ கண்ணே தாலேலோ